சிதம்பரம், மார்ச் 27: புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் சிதம்பரம் நகருக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளதால் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். சிதம்பரம் நகரில் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது சிதம்பரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ரயில்வே பீடர் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை ஏராளமானோர் ரயில்வே பீடர் சாலையில் மதுபானம் அருந்துவதை பார்க்கலாம்.இரவில் அதிகமான ரயில்கள் வருவதால் இந்த சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அப்பகுதியில் அரசு மகளிர் பள்ளி வேறு உள்ளது.