கராத்தே போட்டி தெற்கு கள்ளிகுளம் பள்ளி தேசிய அளவில் சாதனை

ராதாபுரம், மார்ச் 26:  கராத்தே போட்டியில் தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவில் சாதனை படைத்தனர். சோட்டாகான் இந்தியன் கராத்தே அசோசியேசன் சார்பில் தேசிய அளவிலான கராத்தே போட்டி புதுச்சேரியில் நடந்தது. இதில் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிஸா, தமிழ்நாடு என 10 மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை மாவட்டம், தெற்குகள்ளிகுளம் ஓ.எல்.எஸ் பள்ளி சார்பில் பங்கேற்ற 9ம் வகுப்பு மாணவர்கள் டிரிஸில், பிரேம்குமார்,  6ம் வகுப்பு மாணவர்கள் ரோகன், வாசகன் ஆகியோர் கட்டா போட்டியில் 2ம் இடத்தையும், மாணவர் டிரிஸில் குமித்தே போட்டியில் 3ம் இடத்தையும் வென்றனர். சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் ஜாய், ஜெயபாஸ்கர், ஊக்கமளித்த ஆசிரியை பிரின்ஸி, சேவியர் பாப்பா ஆகியோரை பள்ளித் தாளாளரும், முதல்வருமான  அந்தோணி மிக்கேல், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பெற்றோர் என ஏராளமானோர் பாராட்டினர்.

Related Stories: