நீலகண்ட பிள்ளையார் கோயில் திருவிழா ஆலோசனை கூட்டம்

பேராவூரணி, மார்ச் 21: பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்தில் சித்திரை திருவிழா மண்டகப்படிதாரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோயில் செயல் அலுவலர் சிதம்பரம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் பரமானந்தம், பேரூராட்சி தலைமை எழுத்தர் சிவலிங்கம் முன்னிலை வகித்தனர்.  திருவிழா நடைபெறும் நாட்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் திருவிழாவையொட்டி கலைநிகழ்ச்சிகள் நடத்தும் மண்டகப்படிதாரர்கள், இரு தினங்களுக்கு முன்பே உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முன் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவோர், உயர் நீதிமன்ற கிளையில் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கும். தேரோட்ட தினத்தன்று வாக்குப்பதிவு நடக்க இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்புக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை இருப்பதால் தன்னார்வ தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் முடப்புளிக்காடு கிராமத்தார்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: