வீடு புகுந்து நகை திருடிய 6 பேர் கும்பல் அடையாளம் தெரிந்தது

புதுச்சேரி,  மார்ச் 21:  புதுவை, சண்முகாபுரம், மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர்  ரங்கநாதன் (55). கட்டுமான தொழிலாளியான இவருக்கு சாந்திமதி (51) என்ற  மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மருத்துவ செலவு உள்ளிட்ட தேவைகளை  கருத்தில் கொண்டு வீட்டிலிருந்த நகைகளை ரங்கநாதன் தம்பதி கடந்த வாரம் தேசிய  வங்கி ஒன்றில் அடகு வைத்து ரூ.6 லட்சத்து 450ஐ வீட்டிற்கு எடுத்து வந்தனர். அப்போது சாந்திமதிக்கு கழுத்து மற்றும் தோளில் திடீரென அரிப்பு ஏற்பட்டது.  வலி அதிகமானதால் பணப்பையை கட்டிலில் வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார்.  அதுசமயம் அங்குவந்த மர்ம நபர்கள் பணப்பையை திருடிக் கொண்டு தலைமறைவாகி

விட்டனர்.இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி  முறையிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து  விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், சாந்திமதியிடம் பணம் இருப்பதை  நோட்டமிட்ட மர்ம கும்பல், அரிப்பு பொடியை அவர் மீது தூவி கவனத்தை  திசைதிருப்பி துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில்  சாந்திமதி வீட்டில் புகுந்து பணத்தை திருடிச் சென்ற 6 பேர் கும்பல்  அடையாளம் தெரிந்தது. அவர்களின் புகைப்படங்களை சேகரித்த தனிப்படை அனைவரையும்  கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.  அவர்கள் சென்னை,  திருச்சி உள்ளிட்ட பகுதி களைச் சேர்ந்த கொள்ைளயர்களாக இருக்கலாம் என  போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் குற்றவாளிகளின் புகைப்படத்துடன்  தனிப்படை அங்கு விரைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. இதனால் விரைவில்  குற்றவாளிகள் சிக்குவர் என்று தெரிகிறது.

Related Stories: