அரசு பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு

கூடலூர், மார்ச் 20: கூடலூரில் அரசு பழங்குடியினர் பள்ளியில் சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ேநற்று நடந்தது.  உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, சிட்டுக்குருவிகளை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்கள் மத்தியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமையில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக சிட்டுக்குருவிகளின் பாரம்பரியம், அவற்றை பாதுகாப்பதன் அவசியம், சிட்டுக்குருவிகளால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகள், அவை அழிந்து வருவதற்கான காரணங்கள் குறித்து ஸ்மார்ட் வகுப்பு மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பள்ளியில் ஏற்கனவே மாணவர்களைக் கொண்டு 100க்கும் மேற்பட்ட கூடுகள் அமைக்கப்பட்டு சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஏராளமான சிட்டுக்குருவிகளும் வசித்து வருகின்றன.   இந்த நிலையில் சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கான கூடுகளை அமைக்க உறுதி மொழி ஏற்றனர்.

Related Stories: