80 சதவீத வாக்கு பெற்று தந்தால் தங்க மோதிரம்

ஊட்டி, மார்ச் 20: மக்களவை தேர்தலில் ஊட்டி நகரத்தில் உள்ள 79 பூத்துக்களில் 80 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்று தருபவர்களுக்கு தங்க மோதிரம் பரிசு வழங்கப்படும் என ஊட்டி நகர திமுக., செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகர திமுக., செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள நகர அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை ெசயற்குழு உறுப்பினர் இளங்கோவன், நகர துணைச் செயலாளர் ரமேஷ், இச்சுபாய், ரீட்டாமேரி, நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதி ருத்ரமூர்த்தி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நீலகிரி மக்களவை தேர்தலில் திமுக., கூட்டணி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் திமுக., கொள்கை பரப்பு செயலாளர் ராசாவிற்கு ஊட்டி நகர திமுக., சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதில், ஊட்டி நகர நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள், கிளை செயலாளர், செயல்வீரர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நீலகிரி மக்களவை தொகுதி திமுக.,விற்கு ஒதுக்கீடு செய்ததற்கு திமுக., தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடும் திமுக., வேட்பாளர் ராசா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஊட்டி நகரில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் பாடுபடுவது எனவும், ஊட்டி நகரத்தில் உள்ள 79 பூத்துக்களில் 80 சதவீதத்திற்கு லேம் வாக்குள் பெற்று தருபவர்களுக்கு தங்கமோதிரம் பரிசு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறையை கண்டு கொள்ளாமல் உள்ள அதிமுக., அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள் ஜெயகோபி, ரவீந்திரன், கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், ரவி, வில்லியம், வக்கீ–்ல் கார்த்திக், மஞ்சுகுமார், ஹென்றி விஜயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: