நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை இரவு நேர கலை நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும்

திருவண்ணாமலை, மார்ச் 19: இரவு நேரங்களில் நடத்தப்படும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் நேரம் வழங்க கோரி தமிழ்நாடு நாடக மற்றம் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு இசை கருவிகளுடன் வந்து மனு அளித்தனர்.மக்களை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், திருவிழாக்களில் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நடத்தும் கலை நிழ்ச்சிகளுக்கு இரவில் கூடுதலாக நேரம் வழங்க கோரி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாடக மற்றம் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டவர்கள் இசை கருவிகளுடன் மனு அளிக்க வந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அதிகாரியிடம் மனுவினை கொடுக்க முடியாமல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கோரிக்கை மனுவினை செலுத்திவிட்டு சென்றனர்.

அவர்கள் அளித்த மனுவில், தற்போது தேர்தல் நேரம் என்பதால் இரவு நேரத்தில் 10 மணி வரை மட்டும் தான் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதனால் எங்களுடைய தொழில், வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டுபுற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இரவில் கூடுதலாக நேரம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.கேப்சன்திருவண்ணாமலையில் இரவு நேரங்களில் நடத்தப்படும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் நேரம் வழங்க கோரி தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு இசை கருவிகளுடன் வந்து மனு அளித்தனர்.

Related Stories: