தேர்தல் நடைமுறை அமலாகி 4 நாளாகியும் மறைக்கப்படாத சிலைகள், சின்னங்கள்

விருதுநகர்,மார்ச்.15: தேர்தல் நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்து 4 நாட்களாகி விட்ட நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் சுவர் விளம்பரங்கள், உள்ளாட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முன்ளாள் முதல்வர் படங்களுடன் கூடிய திட்ட பலகைகள், முன்னாள் முதல்வர்கள் கட்சி சின்னங்களை குறிப்பிடும் வகையிலான சிலைகள் மற்றும் பீடங்களில் உள்ள சின்னங்கள் மறைக்கப்படவில்லை. விருதுநகரில் அருப்புக்கோட்டை, சாத்தூர் ரோடு சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலை இரட்டை இலை சின்னத்தை வலியுறுத்தும் வகையில் கைவிரல் காட்டப்பட்டுள்ளது. சிலையின் பீடத்தில் சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும் நகராட்சி சார்பில் ரயில்வே பீடர் ரோடு, அரசு தலைமை மருத்துவமனை வளாகங்களில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் முன்னாள் முதல்வர் படங்கள் மறைக்கப்படாமல் உள்ளன. மாவட்ட நிர்வாகம் நடுநிலையோடு தேர்தலை நடத்துவதாக தெரிவிக்கும் நிலையில் இவற்றை மறைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது.வத்திராயிருப்பு தற்காலிக தாலுகா அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் படம்போட்ட பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதேபோல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் நுழைவு வாயிலி–்ல மருத்துவ காப்பீடு திட்டம் குறித்த பிளக்ஸ் பேனரும் அகற்றப்படவில்லை.தேர்தல் அறிவித்த பிறகும் வத்திராயிருப்பு பகுதி கண்மாய் பகுதியில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தென்காசி தொகுதியில் தற்போது அதிமுகவைச் சேர்ந்த வசந்தி முருகேசன் எம்பியாக உள்ளார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் வசந்தி முருகேசன் தரப்பு அதிர்ச்சியில் உள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால் அதிமுகவினரிடையே அதிருப்த்தி ஏற்படும் என பரவலாக பேசப்படுகிறது. இதனால் புதிய தமிழகம் தரப்பும் அதிர்ச்சியில் உள்ளது.

Related Stories: