மொபட் திருடிய 2 பேர் கைது

திருப்பூர், மார்ச் 14:  மதுரை மேலூரை சேர்ந்தவர் பாண்டி (52). இவர் திருப்பூர் வெங்க

பஸ்களை ‘தாறுமாறாக’ நிறுத்துவதால் அவதி

திருப்பூர், மார்ச் 14:  திருப்பூரில், பல பஸ் ஸ்டாப்களில், பஸ்களை தாறுமாறாக நிறுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  திருப்பூரில், அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு குமரன் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இவற்றில், பஸ் ஸ்டாப் ஓரிடத்திலும், நிழற்குடை மற்றொரு இடத்திலும், பஸ் நின்று செல்வது வேறொரு இடத்திலும் உள்ளது. குறிப்பாக, அவிநாசி ரோட்டில், எஸ்.ஏ.பி., தியேட்டர் ‘சிக்னல்” தாண்டிய பின் பஸ் ஸ்டாப் உள்ளது. ‘சிக்னலை’ தாண்டும் ஒவ்வொரு பஸ்சும் பஸ் ஸ்டாப்பை விட்டு வேறு இடத்தில் நிற்கின்றன. இதனால் பயணிகள் ஓடி வந்து பஸ் ஏற வேண்டியுள்ளது.

  இதேபோல், தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் சந்திப்பில் சிக்கனல் உள்ளது. தாராபுரம் ரோட்டில், சில பஸ்கள் அரச மரத்தடி சந்திப்பு ஸ்டாப்பில் நிற்கின்றன. தெற்கு போலீஸ் ஸ்டேஷன் முன் நிற்கின்றன. பல்லடம் ரோட்டில் வீரபாண்டி, வித்யாலாயம், தமிழ்நாடு தியேட்டர், தென்னம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதிகள் நால்ரோடு சந்திப்பு, சிக்னல் அருகே இருப்பதால், ஒவ்வொரு பஸ் டிரைவரும், தங்களுக்கு இஷ்டமான இடத்தில் பஸ்சை நிறுத்துகின்றனர். எந்த இடத்தில் பஸ் நிற்கும் என்று வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகைகள், பல இடங்களில், மாயமாகிவிட்டன. பஸ் ஸ்டாப் உள்ள இடங்களில், அதனை ஓட்டிய பகுதியில் டூவீலர், கார்கள் நிறுத்துவதால், பஸ்சை ஓரமாக நிறுத்த டிரைவர்கள் இடம் தேட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

 இதில் நடுரோட்டில் பஸ்களை நிறுத்துவதால், அதற்கு பின், வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.   இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ‘பஸ் ஸ்டாப் எங்கிருக்கிறது என்பதே தெரியாமல், பல டிரைவர்கள், தாறுமாறாக பஸ்களை நிறுத்துகின்றனர். இந்த நிலையில், ‘சிக்னல்’ உள்ள இடம் இன்னும் மோசம். எனவே, ‘சிக்னல்’ உள்ள இடங்களில், பஸ் ஸ்டாப்களை கண்டிப்பாக மாற்றியமைத்தால் மட்டுமே பிரச்னை தீரும். இந்த விஷயத்தில், போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சியும் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றனர்.பல ஆண்டுகளாக, நீடிக்கும் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ‘சிக்னல்’ அருகேயுள்ள, பஸ் ஸ்டாப்களை, குறைந்தபட்சம், 15 மீட்டர் தூரம் மாற்றியமைக்க வேண்டும். அப்போதுதான், பயணிகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு, உறுதி செய்யப்படும்.

Related Stories: