பொதுஇடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்அவுட், பேனர்களை அகற்ற கலெக்டர் அதிரடி உத்தரவு

புதுச்சேரி, மார்ச் 6:  புதுச்சேரி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 எதிர்வரும் புதுச்சேரி பாராளுமன்ற பொது தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்யும் பொருட்டும், அனைத்து கட்சி மற்றும்  வேட்பாளர்களையும் சமமாக நடத்தும் பொருட்டும், எந்த ஒரு அரசியல் கட்சி அமைப்பு, வேட்பாளர் அல்லது அவரது ஆதரவாளர்கள் அல்லது அவரது அனுதாபிகள், சுவர்விளம்பரம், போஸ்டர்கள் அல்லது பேனர்கள், கட் அவுட்டுகள். போன்றவற்றை பொது மற்றும் தனியார் கட்டிடங்கள், சொத்துகள், வாகனங்கள்.

அரங்குகள், கூடங்கள் போன்ற பொது பார்வைக்கு வைக்கப்படும் இடங்களில் வைப்பது மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுகிற செயலாக கருதப்படும். எனவே,புதுச்சேரி மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர தட்டிகள், சுவரொட்டிகள் மற்றும் நெகிழ் பலகைகள் வைத்

திருப்போர் தாங்களாகவே முன்வந்து தேர்தலுக்கு முன்னர் அவற்றை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் புதுச்சேரி திறந்தவெளி சட்டம்-2010ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: