பள்ளி ஆண்டு விழா

அருப்புக்கோட்டை, மார்ச் 6: அருப்புக்கோட்டை இக்ரா மெட்ரிக் பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.பள்ளி செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் காஜாமுகைதீன் வரவேற்றார். பள்ளி துணைச்செயலாளர் கமால் முஸ்தபாஹசன், வித்யா மெட்ரிக் பள்ளி ஆலோசகர் ஷேக்மஹபூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக அதிக நினைவாற்றலை பெற்று உலக சாதனை படைத்துள்ள 12 வயதுள்ள மாணவர் மஹ்மூத் அக்ரம் கலந்து கொண்டார்.அவர் விழாவில் பேசுகையில், மொழிகளை கற்பதில் சிறு வயது முதலே ஆர்வம் ஏற்பட்டது. தற்போது 400 மொழிகளை வாசிக்கவும், எழுதவும், தட்டச்சு செய்யவும், 46 மொழிகளில் பேசவும் தெரிந்துள்ளேன். தற்போது உள்ள மாணவர்களுக்கு ஞாபக சக்தி குறைந்து படித்ததை சிறிது நேரத்திலே மறந்துவிடுகின்றனர். கடந்த காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கையான உணவுகளை உட்கொண்டதால் அதிக நினைவாற்றலை பெற்று சாதனை படைத்துள்ளனர். எனவே மாணவர் தங்களது உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என பேசினார்.

Related Stories: