மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு சிறப்பு பூஜை

ஆண்டிபட்டி, மார்ச் 6: மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிவனுக்கு இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் விழித்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆண்டிபட்டி நகர் மற்றும் சுற்றியுள்ள ராஜதானி, ஜி.உசிலம்பட்டி, டி.சுப்புலாபுரம், கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜை சிவலிங்கத்திற்கு நேற்று மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 24 வகையான அபிஷேகங்கள் இரவு முழுவதும்  நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து சிவபுராணம் உள்ளிட்டவைகளை எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து சிவபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்த சிவபெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், தீர்த்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது.

Related Stories: