லாரி மோதி கணவன் பலி கர்ப்பிணி மனைவிக்கு 36 லட்சம் இழப்பீடு

சென்னை, மார்ச் 6: சென்னை ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரபிரசாத் (29), நெசவு தொழில் செய்து வந்தார். இவர், கடந்த 2013ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, வேகமாக வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து ராஜேந்திர பிரசாத்தின் இருசக்கர வாகனம் மீது மோதியதில்  ராஜேந்திரபிரசாத், உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது மனைவி நிர்மலா (25), தாய் விஜயா, தந்தை முருகன் ஆகியோர் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பிரசாத்துகு திருமணமாகி 3 மாதங்கள் ஆனதும், அவர் இறந்தபோது மனைவி நிர்மலா கருவுற்று இருந்ததும் நீதிபதியின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நீதிபதி, விபத்து ஏற்படுத்திய லாரியின் சார்பில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனம் 36 லட்சத்தை இழப்பீடாக ராஜேந்திர பிரசாத்தின் மனைவிக்கு வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: