பாகூர் அருகே தனித்தனி விபத்தில் 2 பேர் படுகாயம்

பாகூர், பிப். 27: புதுச்சேரியை சேர்ந்தவர் கார்ல்மார்க்ஸ் (37), பில்டிங் காண்ட்ராக்டர். நேற்று முன்தினம் அரியாங்குப்பம் பகுதியில் இருந்து பைக்கில் புதுவை நோக்கி வந்து கொண்டிருந்தார். அரியாங்குப்பம் அருகே வந்தபோது பின்னால் வந்த பைக் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த கார்ல்மார்க்சை அக்கம், பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து: கடலூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (23), பெயிண்டர். இவர் வேலை முடிந்து புதுவை - கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். காட்டுக்குப்பம் அருகே வந்தபோது, லாரி மோதி படுகாயம் அடைந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தந்தை விஜயராகவன் அளித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: