80 பவுன் நகை ரூ.4.50 லட்சம் மோசடி பெண் மீது வழக்கு

திருச்சி, பிப். 27: 80 பவுன் நகை, ரூ.4,50 லட்சம் ேமாசடி செய்ததாக பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையம் ஹவுஸ் போர்டை சேர்ந்தவர் அங்கமுத்து (75). இவரது மகள் வனிதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதில் கடந்த சில ஆண்டுக்கு முன் வனிதா டீச்சர் வேலைக்காக அரபு நாடான கத்தார் சென்றார். அப்போது இவரின் 2 குழந்தைகளையும் இவருடைய பள்ளி தோழியான வயலூர் ரோடு அருணா நகரை சேர்ந்த சீதாலட்சுமி (எ) சுவேதா (42) என்பவரின் பராமரிப்பில் விட்டு சென்றார். சுவேதா, வயலூர் மெயின்ரோட்டில் ப்யூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வனிதா, வெளிநாட்டில் இருக்கும் போது கடனாக ரூ.5 லட்சம் கேட்டார்.

இதையடுத்து தன்னிடம் இருந்த ரூ.4.50 லட்சம் பணத்தை சுவேதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்தார். தொடர்ந்து தன்னிடம் இருந்த 80 பவுன் நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருக்கும் கொடுத்த நகைகளையும் சுவேதா அடகு வைத்து மோசடி செய்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய வனிதா, கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பி கேட்டார். தருவதாக கூறியும் சுவேதா தராமல் ஏமாற்றி வந்தார். இதையடுத்து நகை மற்றும் பணத்தை மீட்டு தரக்கோரி மாநகர கமிஷனரிடம் வனிதாவின் தந்தை அங்கமுத்து புகார் அ்ளித்தார். விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை அடுத்து மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: