சேலம், பிப். 27: கோடை விடுமுறையை முன்னிட்டு, எர்ணாகுளம், கொச்சுவேலியில் இருந்து ஐதராபாத்துக்கு சேலம் வழியே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் எர்ணாகுளம், ெகாச்சுவேலியில் இருந்து சேலம் வழியே ஐதராபாத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம் - ஐதராபாத்துக்கு (07118) இடையே மே 2,9,16,23,30 மற்றும் ஜூன் 6,13,20,27ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், எர்ணாகுளத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10.55 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.