2ம் தேதி பிரமாண்ட கொண்டாட்டம் சூரியன் எப்எம் நடத்தும் ‘சூரிய பெண்கள் விழா’ விதவிதமான போட்டிகள் * கலக்கலான பரிசுகள் * பெண்களே அசத்த ரெடியா?

மதுரை, பிப்.27: சூரியன் எப்எம் பெண்களுக்காக நடத்தும் ‘சூரிய பெண்கள் விழா’ வரும் சனிக்கிழமை தல்லாகுளம் லெட்சுமி சுந்தரம் ஹாலில் நடைபெற உள்ளது. மதுரை மக்களின் மனம் கவர்ந்த சூரியன் பண்பலை அனைவரும் விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது. அதோடு நேயர்களுக்காக சில விழாக்களையும் அவ்வப்போது நடத்தி பரிசுகளையும் வழங்கி மகிழ்வித்து வருகிறது. சமீபத்தில் தன் நிகழ்ச்சிகளில் புதுமைகளை கொண்டு வந்த சூரியன் எப்எம் நேயர்களைச் சந்திக்க களமிறங்குகிறது. அந்த வகையில் பெண்கள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முழுக்க பெண்கள் மட்டும் பங்கேற்கும் சூரிய பெண்கள் என்ற விழாவை வரும் சனிக்கிழமை(2ம் தேதி) தல்லாகுளம் லெட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்த உள்ளது. மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் பெண்களுக்கான மெகந்தி வரைதல், நெருப்பில்லா சமையல், சிகையலங்காரம் செய்தல், முகத்தில் ஓவியம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சியில் பார்வையாளராகவும் கலந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் கண்டு ரசிக்க கலைநிகழ்ச்சிகளும் விளையாட்டு போட்டிகளும் பரிசுகளும் உள்ளன. கலைநிகழ்ச்சிகளை தேர்ந்த பயிற்சி பெற்ற நடனக் கலைஞர்கள், பாடகர் குழுவினர் நிகழ்த்த உள்ளனர். இவ்விழாவில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள 91599 35935 என்ற எண்ணில் அவசியம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பார்வையாளராக கலந்துகொள்ள இலவச அனுமதிச் சீட்டுகள் நகரின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கிறது. அதனை தேனி ஆனந்தம் சில்க்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ், பைபாஸ் ரோடு அனுஜ் டைல்ஸ், தெற்காவணி மூலவதி ஜெயபிரபா ஜூவல்லரி, தல்லாகுளம் லெட்சுமி சுந்தரம் ஹால் மற்றும் உத்தங்குடியில் உள்ள சூரியன் எப்எம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். அனுமதி சீட்டு வைத்திருக்கும் பெண்கள் மட்டுமே அரங்கினுள் அனுமதிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பம்பர் பரிசினை வெல்ல வாய்ப்புள்ளது. இது தவிர விழா தொடங்கியதிலிருந்து நிறைவு பெறும் வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். விழாவினை தேனி ஆனந்தம் நிறுவனத்தார் வழங்க டி.வி.எஸ் ஷீப்பிட்டர் நிறுவனத்தினர் உடன் வழங்குகின்றனர்.  மேலும் ஆசிர்வாதம் மருத்துவமனை, தெற்காவணி மூலவீதி ஜெயபிரபா ஜூவல்லரி, அனுஜ் டைல்ஸ் மற்றும் ஆருத்ரா பால் நிறுவனத்தார் இணைந்து வழங்குகின்றனர். பரிசுகளை பெப்ஸ் நிறுவனத்தார் வழங்குகின்றனர். விழாவில் தினகரன் நாளிதழும் ஊடகத் தோழமையுடன் கலந்து கொள்கின்றது.

Related Stories: