ஸ்பிக்நகர் அருகே விளைநிலங்களில் அபாய மின்கம்பங்கள் சீரமைப்பு

ஸ்பிக்நகர், பிப். 26:  தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகர் அருகே அத்திமரப்பட்டியில் விளைநிலங்களில் சரிந்தும் நிலையில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆபத்தான மின்கம்பங்கள் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டன. தூத்துக்குடி அடுத்த ஸ்பிக்நகரில் இருந்து அத்திமரப்பட்டி, சிறுபாடு வழியாக புதுக்கோட்டை செல்லும் வழியில் ஏராளமான விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்கள் இருக்கும் பகுதியில் நடப்பட்டிருந்த மின்கம்பங்கள், கடந்த இரு ஆண்டுகளுக்கு பெய்த கனமழையில் முற்றிலும் சேதமடைந்தன. களிமண் அதிகம் உள்ள இடத்தில் நடப்பட்டதால் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரியும் நிலையில் இருந்தது.

மின்கம்பங்கள் சரிந்துவிழும் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவ்வழியை கடக்கும் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் நிலை இருந்தது வந்தது.  இச்சாலை வழியாக ஸ்பிக்நகரில் இருந்து புதுக்கோட்டை, கோரம்பள்ளம், குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதில் செல்லலாம் என்பதால் ஏராளமானோர் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து  தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து உதவி பொறியாளர் முருகேசன், ஆக்க முகவர்கள் பாலசுப்பிரமணியன், சுப்பையா தலைமையிலான அதிகாரிகள் மின்கம்பங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து  மின்வாரிய ஊழியர்கள் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களை சீரமைத்தனர்.

Related Stories: