கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் பறிமுதல் 4 பேர் மீது வழக்கு

கொடைக்கானல், பிப். 22: கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிந்தனர். ஐகோர்ட் உத்தரவுப்படி கூம்பு வடிவ ஒலிபெருக்கி தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதனை பயன்படுத்துவர்களை போலீசார், வருவாய்த்துறையினர் எச்சரிக்கை செய்து வந்தனர். கொடைக்கானலில் இந்த உத்தரவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அமலானது. டிஎஸ்பி பொன்னுச்சாமி தலைமையில் கூம்புவடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தியவர்ளுக்கு நோட்டீஸ் வழங்கி விரைவில் அகற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும் மீறி பயன்படுத்தினால் வழக்கு பதியப்படும் என டிஎஸ்பி எச்சரித்தார்.

இந்நிலையில் கொடைக்கானலில் மைக் செட் தொழில் செய்யும் சிலர் இந்த கூம்புவடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கொடைக்கானலை சேர்ந்த ராஜா, தங்கராஜ், ஸ்டீபன், மூர்த்தி ஆகியோரிடம் விசாரித்த போது கூம்புவடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தியது தெரிந்தது. சப்இன்ஸ்பெக்டர் பொன்குணகேசரன் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து, அவர்களிடமிருந்த கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: