புதன்சந்தையில் ஆடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம்,  பிப்.21: வரத்து அதிகரித்ததால் புதன்சந்தையில் நேற்று ஆடுகள் விலை ₹200 வரை சரிந்தது. நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை  கூடுகிறது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் ஆடு, கிடா மற்றும்  குட்டி ஆகியவற்றை விற்பனைக்கு ஓட்டி வருகின்றனர். இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம்,  எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் வருகின்றனர். மாவட்டத்தில் மழையின்றி வறட்சி நிலவுவதால் நேற்றைய சந்தைக்கு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனால்  ஆடுகள் விலை சரிந்தது. கடந்த வாரம் ₹4,600க்கு விற்பனையான 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு, நேற்று ₹4,400க்கு விற்பனையானது. அதேபோல், கடந்த வாரம் ₹3,700க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு, இந்த வாரம் ₹3,600க்கும், பிறந்து ஒருமாதமே ஆன பெண் குட்டி ஆடு ₹900க்கும், கிடா குட்டி ₹1000க்கும் விற்பனையானது. சந்தையில் ஆடுகள் விலை ₹200 வரை குறைந்ததால், விற்பனைக்கு ஆடுகளை ஓட்டி வந்தவர்கள் கவலையடைந்தனர்.

Related Stories: