உயர்கல்வி இயக்குனரகத்தை கல்லூரி மாணவிகள் முற்றுகை

புதுச்சேரி,  பிப். 21: புதுவை லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலைக்கல்லூரி உள்ளது.  இக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், அங்குள்ள மாணவிகளிடம்  சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள்  கல்லூரி முதல்வரிடம் முறையிட்டுள்ளனர்.

 அப்போது கல்லூரி முதல்வர்  இதுபற்றி விசாரணை நடத்தி, பேராசிரியரை வேறு கல்லூரிக்கு மாற்றுவதாக உறுதி  அளித்தாராம். ஆனால் ஏற்கனவே வேறு கல்லூரியிலும் அவர் மீது இதுபோன்ற  புகாரின் மீது பணியிட மாற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவரை  பணிநீக்கம் செய்ய வேண்டுமென மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக  தெரிகிறது.

 இதை நிர்வாகம் ஏற்க தாமதித்த நிலையில், தங்களது கோரிக்கையை  வலியுறுத்தி வரலாற்றுத் துறையை சேர்ந்த மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர்  நேற்று திடீரென வகுப்புகளை புறக்கணித்தனர். லாஸ்பேட்டை நாவலர் பள்ளி  அருகிலுள்ள உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தை அனவர்கள்  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்துவந்த  லாஸ்பேட்டை புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான  போலீசார் மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: