நெல்லையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

நெல்லை, பிப்.20: நெல்லையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 2வது நாளாக நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கம் செய்ய வேண்டும். பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிஎஸ்என்எல் மேலாண்மைக் கொள்கைக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கடந்த 18ம் தேதி முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்த 900 பேர் 2வது நாளாக நேற்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக 35 டெலிபோன் எக்சேஞ்சுகளில் பணிகள் தடைப்பட்டன. இதனால் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டை பிஎஸ்என்எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 2வது நாளான நேற்று ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சூசை மரிய அந்தோணி தலைமை வகித்தார். என்எப்டிஇ மாவட்ட செயலாளர் கணேசன், எஸ்என்இஏ மாவட்ட செயலாளர் தர், ஜெயராமன், மற்றும் சங்க நிர்வாகிகள் விஜய மணிகண்டராஜா, சுகுமார் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: