வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, பிப். 20: பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்க அனுமதியளிக்க வேண்டும். 3வது ஊதிய உயர்வு மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். பிஎஸ்என்எல் பென்சன்தாரர்களுக்கு 2017 ஜனவரி முதல் பென்சனை மாற்றியமைக்க வேண்டும். பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 18ம் தேதி 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று 2வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிஐடியு சார்பில் மிஷன் வீதி மாதா கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாவட்ட தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ., பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரதேச குழு உறுப்பினர் டி.முருகன், இந்திய வாலிபர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் சரவணன், மாணவர் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: