தா.பேட்டை அருகே மொபட்டில் கடத்தி சென்ற ரேஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் அதிரடி

தா.பேட்டை, பிப்.15: தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளை கண்டதும் அரிசி மூட்டையை போட்டு விட்டு தப்பிச் சென்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   திருச்சி மாவட்டம்  தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரசகிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்முருகன் மற்றும் அலுவலர்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மொபட்டில் ஒருவர் மூட்டைகளுடன் வந்து கொண்டிருந்தார். மொபட்டை அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த வாலிபர் மொபட்டில்  வைத்திருந்த அரிசி மூட்டைகளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து  தப்பியோடி தலைமறைவானார். வருவாய்துறை  அலுவலர்கள் மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் 210 கிலோ ரேசன் அரிசி இருந்தது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் ரேசன் அரிசியை கடத்தி வந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: