சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்

சுரண்டை, பிப். 15:  சுரண்டையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம், ஜவகர்லால் நடுநிலைப்பள்ளியில் நடந்தது. சுரண்டை வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜர் தலைமை வகித்தார். மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் துரை, நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க தலைவர் சுடலை காசி, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி சேர்மச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை வியாபாரிகள் சங்க செயலாளர் நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்புகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் வணிகர்களை பாதிக்கும் சட்ட சரத்துகள், பிளாஸ்டிக் தடையில் வணிகர்கள் மீது திணிக்கப்படும் சட்டவிதிகள் மற்றும் மே 5ம் தேதி நடைபெறும் வணிகர் தின மாநாடு குறித்து பேசினார். வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாக வசதிக்காக நெல்லை மேற்கு மாவட்டம் என்ற புதிய நிர்வாக அமைப்பு விரைவில் துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநில பொருளாளர் சதக் அப்துல்லா, சுரண்டை தொழிலதிபர் எஸ்வி.கணேசன், பழனி நாடார் ஆகியோரும் பேசினர். மண்டல தலைவர் சுப்பிரமணியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ், மாநில செயலாளர் நன்சிங், வைகுண்ட ராஜா, குணசேகரன், சிவசக்தி முத்தையா, ஜெயபிரகாஷ், சுப்பிரமணியன், சுகிர்தராஜ், அழகு சுந்தரம், கணபதி, கடற்கரை, ரத்தினசாமி, முத்துக்குமார், ரமேஷ், பாலன், அண்ணாமலைக்கனி, கணேசன், சாகுல்ஹமீது, பன்னீர்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை தலைவர் துரை நன்றி கூறினார்

Related Stories: