பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம்

திருப்பூர்,பிப்.14: திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டிலை ஆங்காங்கே வீசிச் செல்வதால் பயணிகள் அவதியடைகின்றனர்.

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்கும் குடிமகன்கள் பஸ் ஸ்டாண்டில் ஓரங்களில் நின்று குடிக்கின்றனர். இதனால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர். குறிப்பாக தனியார் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் குடித்துவிட்டு பாட்டில்களை வீசிச் செல்கின்றனர். இவை உடைந்து பயணிகளின் கால்களை பதம் பார்க்கின்றன. மேலும், நடைபாதை சந்துகளில் நின்றுக்கொண்டு மது அருந்துகின்றனர். சிலர் போதை தலக்கேறி அலங்கோலமான நிலையில் விழுந்து கிடக்கின்றனர். இதனால் அந்த வழியாக பெண்கள், மாணவிகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பஸ் ஸ்டாண்டில் குடிமகன்கள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Advertising
Advertising

மது விற்ற இருவர் கைது

திருப்பூர், பிப்.14: திருப்பூர்  பெருமாநல்லுார்  செல்லும் வழியிலுள்ள இரு டாஸ்மாக் மதுக்கடை அருகே  மது விற்பனை செய்த முத்துகுமார்(38), வல்லரசு(27) ஆகியோரை மதுவிலக்கு  போலீசார் கைது செய்தனர்.

Related Stories: