பாகம்பிரியாள் கோயிலில் பிப்.22ல் கும்பாபிஷேகம்

சிவகங்கை, பிப்.14: சிவகங்கை அருகே திருமலையிலுள்ள பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகங்கையில் சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானத்திற்குட்பட்ட பாகம்பிரியாள், மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. குடவரைக்கோவிலையும் கொண்டுள்ள இக்கோவில் பல நூற்றாண்டு வரலாற்று பாரம்பரியம் மிக்கது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான கோவில் பராமரிப்பு பணிகள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.

பிப்.18 காலை 10மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகப் பணிகள் தொடங்குகின்றன. பிப்.20, மாலை 3 மணி முதல் வாஸ்து சாந்தி, முதல் கால யாகபூஜை நடக்கிறது. பிப்.21, காலை.8.45 மணிக்கு விசேஷசந்தி, இரண்டாம் கால யாகபூஜை, மூன்றாம் கால யாகபூஜை நடக்கிறது. பிப்.22, காலை 8.45மணி முதல் 9.45மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டு பணிகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

Related Stories: