அரசு கல்லூரியில் ஐம்பெரும் விழா எஸ்பி பங்கேற்பு

நாமக்கல், பிப்.14:  நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில், ஐம்பெரும் விழா நடந்தது. இதில், எஸ்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் நுண்கலை மன்ற விழா, முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, பட்டமளிப்பு மற்றும் ஆண்டு விழா என ஐம்பெரும் விழா நடந்து வருகிறது. 3வது நாளான நேற்று விளையாட்டு விழா மைதானத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட எஸ்பி அருரளசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு துறை மாணவிகள் ஏந்தி வந்த ஜோதியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர், 100 மீ, தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, எஸ்பி பாராட்டினார். தொடர்ந்து நடந்த இசை நாற்காலி போட்டியில் எஸ்பி அருளரசு, டிஎஸ்பி ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

விழாவில், எஸ்பி. அருளரசு பேசுகையில், ‘பெண்களுக்கு தான் மனவலிமை அதிகம் உள்ளது. அதே சமயம் பெண்கள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளுக்கு காரணம் தோல்விகளை தாங்கி கொள்ளாதது தான். எனவே, மாணவிகளாகிய நீங்கள் அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எதிலும் 100 சதவீதம் வெற்றி பெற முடியாது. அதில் கிடைக்கும் தோல்விகளை பழகி கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த செயலையும் எளிதில் செய்ய முடியும்,’ என்றார். விழாவில் உடற்கல்வி இயக்குனர் கோபிகா, நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: