குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க ஆயத்த பணிகள் மும்முரம்...

கரூர், பிப்.14: குப்பையில் இருந்து மண் புழு உரம் தயாரிக்க ஆயத்தப்பணிகள் நடை

பெற்று வருகிறது.    மண்புழு உரம் ரசாயன உரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. வீடு மற்றும்  கடைகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம்  தயாரிக்கப்படுகிறது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர்  ஊராட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது கள்ளப்பள்ளி  முதல்நிலை ஊராட்சியில் மண்புழு உரம் மக்கும் குப்பையில் இருந்து  தயாரிக்கப்பட உள்ளது. லாலாப்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி அருகே இயற்கை சூழலோடு  கீற்றில் குடில்

அமைக்கப்பட்டுள்ளது. குப்பைகளில் மண்புழுவை விட்டு உரம்  தயாரிப்பதற்கான தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.  கள்ளப்பள்ளி ஊராட்சியில்  ஏற்கனவே பணியில் உள்ள 20 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 1750 வீடுகள்,  200 கடைகளில் இருந்து 750 கிலோ குப்பைகள் சேகரமாகும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்து மாதந்தோறும் 400 முதல் 500 கிலோ வரை  மண்புழு உரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாழை,  வெற்றிலை சாகுபடி அதிகம் உள்ள பகுதியில ரசாயன உரத்திற்கு மாற்றாக  விவசாயிகள் மண்புழு உரத்தை அதிக அளவில் பயன்படுத்த துவங்கினால் அதற்கேற்ப  இன்னும் கூடுதலாக உரம் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு  தயாரிக்கப்படும் உரம் கிலோ ரூ.10க்கு ஊராட்சி அலுவலக்தில் விற்பனை  செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: