ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 8 பேர் படுகாயம்

ஆரணி, பிப்.13: ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 8 பேர் படுகாயம் அடைந்தார்.ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கிருத்திகை முன்னிட்டு 3ம் ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. திரளான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த வேலூர் மாவட்டம் கீழ் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ₹51 ஆயிரமும்.

திருவண்ணாமலை மாவட்டம் காசியத்தூர் கிராமத்தை சேர்ந்த காளைக்கு 2ம் பரிசாக ₹41 ஆயிரமும், வேலூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த காளைக்கு 3ம் பரிசாக ₹31 ஆயிரம் மற்றும் தங்க நாணயமும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 30 பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், காளை முட்டியதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், டிஎஸ்பி செந்தில் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் பாரதி, நகர சப்-இன்ஸ்பெக்டர் ஜமிஸ்பாபு உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: