விழிப்புணர்வு மையம் ‘வெறிச்’

கொடைக்கானல், பிப்.12: கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறை விழிப்புணர்வு மையத்தில் ஆள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தியடைந்தனர்.  கொடைக்கானலில் சுற்றுலாதலங்களான தூண் பாறை மற்றும் பிரையண்ட் பூங்காவில் உணவு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2 மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மையத்தில் உணவு மாதிரிகள் வைக்கப்பட்டு, உணவு சம்பந்தப்பட்ட புகார் தெரிவிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கண்ணன் இந்த மையங்களில் எப்பொழுதும் உதவி செய்வதற்கு அலுவலர்கள் இருப்பார்கள் என்று கூறினார். ஆனால் தூண் பாறை அருகே அமைக்கப்பட்டிருந்த இந்த விழிப்புணர்வு மையத்தில் உணவுத்துறை சார்பாக யாரும் இல்லாததால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும் காலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த மையங்களில் உணவுத் துறை பணியாளர்கள் இருந்து உணவுத்துறை சம்பந்தப்பட்ட சந்தேகங்கள் தீர்க்கும் விதமாக பணி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: