கரூர் பேருந்து நிலைய மாடி ஆர்எம்எஸ் அலுவலகத்தில் மின் விபத்து அபாயம்

கரூர், பிப். 8:கரூர் பேருந்து நிலைய மாடியில் உள்ள ஆர்எம்எஸ் அலுவலகத்தில் ஆபத்தான மின்சார இணைப்புகளை சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் நகராட்சி பேருந்து நிலையத்தின் மாடியில் ஆர்எம்எஸ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முன்பு தொலைபேசி மற்றும் தந்தி அலுவலகங்கள் செயல்பட்டன.தந்தி முறை எடுக்கப்பட்டு விட்டதால் தற்போது ஆர்எம்எஸ் அலுவலகம் மட்டும் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு மாலை நேரத்தில் தபால் அனுப்புவதற்காகவும், பதிவுத்தபால், ஸ்பீடு போஸ்ட் மற்றும் ஸ்டாம்ப் வாங்குவதற்காகவு ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாடிப்பகுதியில் மின் இணைப்புகள் திறந்த நிலையில் கிடக்கிறது, மேலும் சில இணைப்புகள் தொங்கி கொண்டு இருக்கிறது.எனவே மின் இணைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: