டாஸ்மாக் பார் ஊழியர் கழுத்தை இறுக்கி கொலை: சக ஊழியர் கைது

சென்னை, பிப். 8: புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் (38). சென்னை அண்ணா சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், பாரில் வேலை செய்யும் நபர்களுடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். ேநற்று முன்தினம் இரவு பணி முடிந்து வள்ளியப்பன் உணவு சாப்பிட அறைக்கு சென்றுள்ளார். அப்போது, பாரில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு காலி பாத்திரங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த வள்ளியப்பன், எனக்கான உணவை யார் சாப்பிட்டது என்று கேட்டு, வடமாநில வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர் அருகில் இருந்த கயிறை எடுத்து வள்ளியப்பன் கழுத்தில் மாட்டி இறுக்கி ன்றுள்ளனர்.இதுகுறித்து பார் ஊழியர்கள் ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வள்ளியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர்.முதற்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சாமல் உசேன் (26) என்றும், கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பாரில் சர்வராக வேலைக்கு சேர்ந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையால் வள்ளியப்பனை கயிறால் கழுத்தை இறுக்கி அவர் கொலை செய்துள்ளார். இதையடுத்து உசேனை செல்போன் உதவியுடன் ேநற்று போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: