அன்னபூரணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

சேலம், பிப்.7: சேலம் பெரியசீரகாபாடியில், அன்னபூரணா பொறியியல் கல்லூரி மற்றும் விம்ஸ் மருத்துவமனை இணைந்து ரத்த தானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தின. முகாமை கல்லூரி முதல்வர் அன்புசெழியன் தொடங்கி வைத்தார். விம்ஸ் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி டாக்டர் சந்திரசேகர், ரத்த தானத்தின் அவசியம் மற்றும் மாணவர்களின் பங்கு குறித்து பேசினார். ரத்த தானம் வழங்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விம்ஸ் மருத்துவமனையில் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார். ரத்த தானம் செய்வதன் சிறப்பு குறித்து, விம்ஸ் மருத்துவமனை ரத்த வங்கி ஆலோசகர் எடுத்துரைத்தார். மேலும், அவசர தேவையின் போது கல்லூரி மாணவர்கள் பெருமளவில் ரத்த தானம் செய்ய முன் வருகின்றனர் என கூறினார். முகாமில் 35க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர்.  முகாம் ஏற்பாடுகளை, அன்னபூரணா பொறியியல் கல்லூரி துணை முதல்வர் சரவணன், முதலாமாண்டு டீன் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: