படுக்கப்பத்து கிராமத்தில் இன்று வெயிலுகந்தஅம்மன் கோயில் கொடை விழா

நெல்லை, பிப். 5: படுக்கப்பத்து கிராமம் வெயிலுகந்தஅம்மன் கோயிலில்  கொடை விழா  இன்று விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி படுக்கப்பத்து வெயிலுகந்தஅம்மன் கோயிலில் கடந்த 29ம்தேதி அம்மனுக்கு அலங்கார குருபூஜை, அன்னதானம், கோயிலிலிருந்து சப்பரம் எடுத்து வருதல் நடந்தது. கொடை விழாவையொட்டி இன்று (5ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு கும்பாபிஷேகமும், காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலமும் நடக்கிறது.  நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு அலங்கார சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. அலங்கார தீபாராதனைக்கு பிறகு கோயிலில் இருந்து சூலாயுதத்தை சப்பர திடலுக்கு கொண்டுவரும் வைபவம், வாண வேடிக்கை நடக்கிறது. இதைத் தொடர்ந்து சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது. சப்பரத்தை தலையில் வைத்து ஊர்வலம் கொண்டு செல்வது  இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும். கோயில் கொடை விழா ஏற்பாடுகளை படுக்கப்பத்து வெயிலுகந்த அம்மன் கோயில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: