புத்தூரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ராஜபாளையம், பிப்.1: ராஜபாளையத்தில் நேற்று காலை ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான புத்தூரணி உள்ளது. 6 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஊரணியை ஆக்கிரமித்து 450 குடியிருப்புகள், 17 வணிக நிறுவனங்கள், 2 சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. 40 வருடங்களாக இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன.இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவின்பேரில் 3 மாதங்களுக்கு முன்பு புத்தூரணியில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடாக செண்பகத்தோப்பு சாலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் செவி சாய்க்கவில்லை.இதனையடுத்து ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் நேற்று காலை புத்தூரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வணிக வளாகங்களை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணி நடந்தது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை டிஎஸ்பி ரவிச்சந்திரன் மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: