முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான நேர்காணல்

கள்ளக்குறிச்சி, ஜன. 30:  கள்ளக்குறிச்சி அருகே மேலூர் முருகா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் நடந்தது. கல்லூரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ெஜகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் கண்ணன் வரவேற்றார். சென்னை ரைட்லைன் குரூப் ஆப் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கஜேந்திரநாத், தாமரைகனி, சுரேந்திரன், அருண்குமார் ஆகியோர் சிவில், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறையில் நேர்காணல் நடத்தி 125 மாணவர்களை தேர்வு செய்தனர். மாதந்தோறும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான சம்பளம், நிறைவான பயிற்சி மற்றும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என கல்லூரி தாளாளர் தெரிவித்தார். ஏற்பாடுகளை துறை தலைவர்கள் விஜயராஜ், கந்தப்பிள்ளை, பாஸ்கர், கண்ணன், உடற்கல்வி இயக்குனர் செந்தில்முருகன் மற்றும் ரூபன் ஆகியோர் செய்திருந்தனர். துணை முதல்வர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: