பொத்தகாலன்விளை திருத்தல தேர் பவனி

சாத்தான்குளம், ஜன.25:  பொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாணமாதா திருவிழாவையொட்டி  தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல பெருவிழா ஜன.14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் திருவிழாவில்   செட்டிவிளை பங்குத்தந்தை ததேயுஸ்ராஜன் தலைமையில் திருப்பலி நடந்தது. சொக்கன்குடியிருப்பு பங்குத்தந்தை மைக்கேல் ஜெகதீசு மறையுரை வழங்கினார். காலை 10:30 மணிக்கு திருமுழுக்குஅருட்சாதனம் வழங்கப்பட்டது. இலங்கநாதபுரம் பங்குத்தந்தை ஜோசப் ரத்னராஜ், சென்னை பங்குத்தந்தை அருள்செல்வன்  மறையுரை வழங்கினர். மாலை மலையாள திருப்பலியும், தொடர்ந்து மாதாவின் 106வது தேர்ப்பவனியும் நடந்தது. திசையன்விளை பங்குத்தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் டோமி மறையுரை வழங்கினார். 10ம் திருவிழாவில்  திருத்தேர் முன்பு சென்னை பங்குத்தந்தை அருட்செல்வர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜுடுபால்ராஜ் மறையுரை வழங்கினார். இரவு அன்னையின் தேர்ப்பவனி,  தொடர்ந்து பங்குத்தந்தை மற்றும் திருத்தல அதிபர் ஜோசப் ரவிபாலன் தலைமையில் நற்கருணை ஆசீர் நடந்தது.   நாளை வரை ஆலய திடலில் ஜெபஸ்தியார் நாடகம் நடக்கிறது. அதன்பின் கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை, திருத்தல அதிபர் ஜோசப் ரவிபாலன் தலைமையில் அருட்சகோதரிகள், அன்பியங்கள் செய்துள்ளனர்.

Related Stories: