திருவள்ளுவர் சிலைக்கு பாதுகாப்பு

கன்னியாகுமரி:  கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் திட்டங்கள் ஏதும் இருந்தால் அதை முறியடிக்கும் வகையில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம், பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.பகவதியம்மன் கோயில் செல்லும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி நாத் உத்தரவின்படி, கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகுகள் மூலம் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும் கடலோர பகுதிகளில் உள்ள சோதனைசாவடிகளில் வாகன தணிக்கையும் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: