திருவட்டார் அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்

 

குலசேகரம், மே 31: திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் திருவட்டார் அருகே உள்ள அழகியமண்டபம், காட்டாத்துறை சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளில் சோதனைகள் நடத்தினர். அப்போதுகாட்டாத்துறை அருகே உள்ள கல்லுவிளையில் செல்லதங்கம் (65) என்பவரது கடையை சோதனையிட்ட போது, அங்கு மறைத்து வைத்திருந்த 19.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் நாகர்கோவில் உணவு பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

The post திருவட்டார் அருகே குட்கா விற்ற கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Related Stories: