ஆற்றூரில் கலைஞர் பிறந்த நாள் விழா

குலசேகரம், ஜூன் 4: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஆற்றூர் பேரூர் திமுக சார்பில் ஆற்றூர் சந்திப்பில் நடந்த விழாவில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் கலைஞர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை வகித்தார். திருவட்டார் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜாண்பிரைட், ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தங்கவேல், திட்டக்குழு உறுப்பினர் சிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் திலிப்குமார் மாவட்ட துணை செயலாளர் இராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ், திருவட்டார் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், கண்ணனூர் ஊராட்சி தலைவர் ரெஜினி விமலாபாய், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராம்சிங், ஆற்றூர் பேரூர் முன்னாள் செயலாளர் பென்னட், ஒன்றிய பிரதிநிதி டால்ஜித், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ஜாண்சிலின் சேவியர்ராஜ், துணை அமைப்பாளர் சேவியர், கவுன்சிலர்கள் பாபு, சுனிதா, ஜேம்ஸ், கவிராஜகுமாரி, பேரூர் அவை தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் டாக்டர் செல்வின் ஞானபிரகாஷ், கிளை செயலாளர்கள் ஆன்றனி , அஷ்வின் ஹென்றி, ராஜசேகர், சுமதி, ஏற்றக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் றூஸ், முன்னாள் துணை தலைவர் ஜோண்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஆற்றூரில் கலைஞர் பிறந்த நாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: