அருகில் மணமகனின் பெற்றோர் மோகன்-விஜயா.மதுரைக்கு 27ம் தேதி வரும் பிரதமர் மோடிக்கு எருமை மாடுகளுடன் சென்று கருப்புக்கொடிதமிழ்த் தேசிய கட்சி முடிவு தமிழ்த் தேசிய கட்சி முடிவு

தஞ்சை, ஜன. 24:  மதுரைக்கு 27ம் தேதி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எருமை மாடுகளுடன் ஊர்வலமாக சென்று கருப்புக்கொடி காட்டப்படும் என்று தமிழ்த் தேசிய கட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்த் தேசிய கட்சி தலைவர் தமிழ்நேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கஜா புயலால் பல மாவட்டங்கள் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ளன. கஜா புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி இதுவரை பார்வையிட வரவில்லை. உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரதமர், தனது நாட்டை பற்றி கவலைப்படாதது வருத்தமளிக்கிறது. ஆறுதல் வார்த்தை கூட சொல்லாமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் பிரதமர் மோடி வஞ்சித்து வருகிறார். தமிழர்கள் நலன் பற்றி மத்திய மோடி அரசுக்கு கவலையில்லை.டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி பாலைவனமாக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகத்துக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் ஆர்வமாக உள்ளது. எனவே தமிழக மக்களை வஞ்சித்து தமிழகத்தை பாலைவனமாக்க முயல்வதை கண்டித்து வரும் 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு எருமை மாடுகளுடன் ஊர்வலமாக சென்று கருப்புக்கொடி காட்டப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கும்பகோணம், ஜன. 24:  கும்பகோணம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செம்பட்டை (எ) ஜெய்பிரகாஷ் (45). ரவுடியான இவர், தற்போது ஆட்டோ டிரைவராக இருந்தார். இவர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து மனைவி கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 19ம் தேதி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயப்பிரகாஷ், எலிபேஸ்ட்டை சாப்பிட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

Related Stories: