தேன்கனிக்கோட்டை, ஜன.22:அஞ்செட்டி அருகே கோட்டையூர் ரேஷன் கடையில் தளி பிரகாஷ் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அஞ்செட்டி தாலுகா கோட்டையூர் மலை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராமத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டை தாரார்களுக்கும் முறையாக அரிசி, பருப்ப, சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற அத்யாசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா? என விற்பனையாளர் மற்றும் கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.