தமிழர் பண்பாடு, கலாச்சார பேரவை பொங்கல் விழா

அவிநாசி,ஜன.18:தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை  சார்பில் அவிநாசி ஆட்டையாம்பாளையத்தில் பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, தமிழர் பண்பாடு, கலாச்சார பேரவை அவிநாசி வட்டாரத்தலைவர் நடராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். தமிழரின் சீர்மிகு பண்பாடும், கலாச்சாரமும் என்கிற தலைப்பில் திரைப்பட நடிகர் விஜய்கிருஷ்ணராஜ் சிறப்புரையாற்றினார். திருப்பூர் ‘ராம்ராஜ்காட்டன்’ நிறுவனர் நாகராஜுக்கு  பாராட்டு விழா நடந்தது.   தமிழர் பாரம்பரிய கிராம கலைகளான சிலம்பம், கும்மியாட்டம், சலங்கை, ஒயிலாட்டம், ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சு, பாடல் ஒப்புவித்தல், பாட்டு மற்றும் நடன போட்டிகள் நடந்தது. மேலும் குரு நாட்டியாலயா சார்பில் பரதநாட்டியம், வெள்ளலூர் கோபாலகிருஷ்ணன் குழுவினரின் ‘பண்ணும்பரதமும்’ பரதநாட்டியம், கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் திருப்பூர் பெருஞ்சலங்கையாட்டம், கே.ராயர்பாளையம் ‘சங்கமம் குழுவின் ஒயிலாட்டம் நடந்தது. ஆட்டையாம்பாளையம் கிராமம் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளித்தது.
Advertising
Advertising

Related Stories: