திருப்பூரில் பொதுக்கூட்டம் நடத்த தடை

திருப்பூர், ஜன.18: திருப்பூர் மாநகர் பகுதியில் பொதுகூட்டம், ஆர்பாட்டங்கள் நடத்த  31 ம் தேதி நள்ளிரவு வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாநகரில் தமிழ்நாடு மாநகர காவல் சட்டம் பிரிவு 41-ன் படி ஜனவரி 17 ம் தேதி நள்ளிரவு முதல் ஜன.,31 ம் தேதி நள்ளிரவு வரை 15 நாட்களுக்கு, தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Advertising
Advertising

எனவே, திருப்பூர் மாநகர எல்லைக்குள் காவல்துறையின் முன் அனுமதி இன்றி, மாநாடு, பொதுக்கூட்டம், போராட்டம், பேரணி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.இதனால் பொதுமக்கள் காவல்துறையின் முன் அனுமதியின்றி அது போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது. அதே நேரம் திருமண விழா மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.

மேலும் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு 5 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்குவது குறித்தும், ரத்து செய்வது குறித்தும் பரிசீலித்து முடிவு தெரிவிக்கப்படும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: