சலவைக்கூடம் சீரமைப்பு பணி ரூ.8 லட்சத்தில் துவக்கம்

புதுச்சேரி, ஜன. 11: லாஸ்பேட்டை தொகுதி சலவையாளர் நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உழவர்கரை நகராட்சி மூலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு  நிதியிலிருந்து ஏற்கனவே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைத்தும், கழிப்பிட கட்டிடத்தை சீர்செய்து அதன் கூரை மீது கிரில் அமைத்து தந்தும் மற்றும் துணி சலவை செய்யும் கூடத்தை சுற்றியுள்ள மதில் சுவர் கிரில் அமைப்புடன் உயரப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ரூ.8.71 லட்சம் செலவில் துணி சலவை செய்யும் கூடத்தில் இடிந்து மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள தொட்டிகளை சீர் செய்யும் பணி நேற்று துவங்கியது. தொகுதி எம்எல்ஏவும், துணை சபாநாயகருமான வி.பி.சிவக்கொழுந்து பூமி பூஜை செய்து இதனை துவக்கி வைத்தார். உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் கலிவரதன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் மற்றும் சலவையாளர் நகர் நலவாழ்வு சங்கத்தினர், தொகுதி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: