திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் செட்டி நாட்டு உணவு திருவிழா

திருவில்லிபுத்தூர், ஜன. 10: திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கேட்டரிங் அறிவியல் மற்றும் ஓட்டல் நிர்வாகத்துறை சார்பில் அடுப்பங்கரை செட்டி நாட்டு உணவு திருவிழா  பல்கலை வாளாகத்தில் நடைபெற்றது.உணவு திருவிழாவிற்கு பல்கலை துணைத்தலைவர் சசிஆனந்த் தலைமை வகித்தார். விழாவை வாழ்த்தி துணைவேந்தர் நகாகராஜ், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் பேசினர். துறைத்தலைவர் பிரபு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைகழக கேட்டரிங் அறிவியல்துறை பேராசிரியர் ரிஷி பிராங்களின் கலந்து கொண்டார். உணவு திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட செட்டிநாடு பாரம்பரிய உணவுகள் தாயாரித்து வைக்கபட்டிருந்தன.விழாவில் காய்கறிகளில் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கபட்டு காட்சிக்கு வைக்கபட்டிருந்தன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. மாணவர் மனோஜ்குமார் நன்றி

கூறினார்.

Related Stories: