இடதுசாரிகள், வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,  ஜன. 10: நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் 2ம் நாளான நேற்று இடதுசாரிகள்,  வி.சிறுத்தைகள் கட்சியினர் இந்திராகாந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.பொது விநியோக திட்டத்தை பலப்படுத்தி ரேசன் கடைகள் மூலம்  அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள்,  சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவித்தன.இதையொட்டி புதுவையில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்றுமுன்தினம் முழு அடைப்பு  நடைபெற்றது. இந்த நிலையில் 2வது நாளான நேற்று இந்திராகாந்தி சிலை அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்,  வி.சிறுத்தைகள், லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள், தொழிற்சங்கங்கள்   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டன.இந்திய கம்யூனிஸ்ட் விஸ்வநாதன், சலீம், அபிஷேகம், சேதுசெல்வம்,  மார்க்சிஸ்ட் ராஜாங்கம், ெபருமாள், வி.சிறுத்தைகள் தேவ.பொழிலன், அமுதவன்,  லெனினிஸ்ட் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இதில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷமிட்டனர்.

Advertising
Advertising

Related Stories: