மன்னார்குடி, ஜன. 9: புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி மன்னார்குடியில் நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், நகராட்சி ஒப்பந்த ஊழியர் களுக்கு மாதம் ரூ. 18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும், .ஊதியத்தை அரசு கருவூலம் மூலம் வழங்க வேண்டும், நகராட்சி ஊழியர்களுக்கு வழங்க பட வேண்டிய 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 8, 9 ஆகிய இரு நாட்களும் மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போ ராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டது.