வாழ்க்கையில் வெற்றி பெறுவதே குறிக்கோளாக இருக்க வேண்டும்

புதுச்சேரி, ஜன. 8: புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கான சட்டரீதியான உரிமைகள் பற்றிய கருத்தரங்கம் நேற்று நடந்தது. புதுச்சேரி மாநில சட்ட பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சேபனா தேவி கலந்து கொண்டு பேசுகையில், அனைவருக்கும் நீதி சமமாக கிடைக்க வேண்டும் என சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.  யாருக்காவது சட்டம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சட்ட உதவி மையத்தை  அணுகலாம். அவர்களுக்கு இலவசமாக சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். நீதிமன்றத்தில் வாதாடவும் வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து தரப்படும். ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இந்த இலவச சேவை வழங்கப்படாது. இந்த சட்ட உதவி மையத்தின் சேவை குறித்து மக்களிடம் மாணவிகள் எடுத்து கூற வேண்டும்.மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் மறைக்க கூடாது. பள்ளியிலும், வெளியிடங்களிலும் எது நடந்தாலும், அதனை மறைக்காமல் பெற்றோரிடமோ, சகோதர, சகோதரிகளிடமோ பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல், சண்டை வந்தால் அதனை மறந்துவிட்டு முதலில் வந்து பேசுபவரே வெற்றி பெற்றவராக கருதப்படுவர். எனவே, அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதையை குறிக்கோளாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 இதில் புதுவை பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் கல்பனா, ராமானுஜன், சாருலதா, காந்திமதி, செவிலிய அதிகாரி ஜெயலட்சுமி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் துணை முதல்வர் செல்வசுந்தரி, வழக்கறிஞர் திலகவதி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: